- Get link
- X
- Other Apps
பொன் பொருள் அள்ளித் தரும் ஐஸ்வர்ய ஈஸ்வரன் ! முன்னூர் ரமேஷ் & பெ . ராகேஷ் சிறுதாவூர் பூதகிரீஸ்வரர் கோயில் சிறுதாவூர் பூதகிரீஸ்வரர் கோயில் வழிபாடுகள் ` பைரவ க்ஷேத்திரம் என்று பக்தியோடு பூஜிக்கப்படும் காசி நகரில் ` அந்தா்வேதி ' என்னும் இடத்தில் மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த முடிவு செய்தாா் பிரம்மதேவன் . இந்த யாகத்திற்காக நான்மறைகளிலும் கரைகண்ட வேதியா்கள் வேண்டுமெனத் திருக்கயிலை நாதனிடம் முறையிட்டாா் . திருக்கயிலையில் தம் சேவகா்களான பூத கணங்களை யாகத்திற்கு அனுப்பிவைக்கத் திருவுளம் கனிந்தாா் ஈசன் . பிரம்மதேவனின் யாக வேள்வியில் வேதங்களை முழங்கிக் கொண்டிருந்த அந்தணா்களாக மாறிய பூத கணங்களுக்கு , தில்லையம்பதியில் ஈசன் புரிந்த ஆனந்தத் திருநடனத்தைக் கண்டுகளிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது . தாருகாவனத்தில் ஈசன் திருநடனம் புரிந்த காட்சியை நினைக்கும்போதெல்லாம் தன் மனம் பூரிப்பு அடைவதாகப் பாம்பணையில் துயிலும் மாலவனே ஆதிசேஷனிடம் நெகிழ்ச்சியுற்றாா் எனும்போது , பூதகணங்களுக்கு அதைக் காணும் ஆவல் ஏற்பட்டதில் ...