ஓம் முருகா ! ஓம் சரவண பவ ! 63 நாயன்மார்கள் வரலாறு சுருக்கம் : 2 - அப்பூதியடிகள் வரலாறு : ஓம் சரவண ஜோதியே நமோ நம ! ஓம் அகத்தீசாய நம ! ஓம் அரங்க மகா தேசிகாய நம ! ஓம் அப்பூதியடிகள் நாயனார் திருவடிகள் போற்றி ! பெயர் : அப்பூதியடிகள் நாயனார் பூசை நாள் :தை சதயம் அவதாரத் தலம் :திங்களூர் முக்தித் தலம் :திங்களூர் சோழமண்டலத்திலே, திங்களுரிலே பிராமணகுலத்திலே, பாவங்கள் என்று சொல்லப்பட்டவைகள் எல்லாவற்றையும் நீக்கினவரும், புண்ணியங்களென்று சொல்லப்படவைகள் எல்லாவற்றையும் தாங்கினவரும், சிவபத்தி அடியார்களில் சிறந்தவருமாகிய அப்பூதியடிகணாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவானுபூதிமானாகிய திருநாவுக்கரசுநாயனாருடைய மகிமையைக் கேள்வியுற்று, அவர்மேலே மிக அன்பு கூர்ந்து, தம்முடைய வீட்டினுள்ள அளவைகள் தராசுகள் பிள்ளைகள் பசுக்கள் எருமைகள் முதலிய எல்லாவற்றிற்கும் இந்நாயனாருடைய பெயரையே சொல்லிவருவார். இன்னும் அவர் மேலாசையினாலே, திருமடங்கள் தண்ணீர்ப்பந்தர்கள் குளங்கள் திருநந்தனவனங்கள் முதலியனவற்றை அந்நாயனார் பெயரினாற் செய்து கொண்டிருந்தார். இருக்குநாளிலே, அத்திருநாவுக்கரசு நாயனார் திருப்பழனமென்னும் ஸ்தலத்தை வணங்கிக்...
Choose for Excellence