ஓம் முருகா ! ஓம் சரவண பவ !
63 நாயன்மார்கள் வரலாறு சுருக்கம் :
2 - அப்பூதியடிகள் வரலாறு :
ஓம் சரவண ஜோதியே நமோ நம !
ஓம் அகத்தீசாய நம !
ஓம் அரங்க மகா தேசிகாய நம !
ஓம் அப்பூதியடிகள் நாயனார் திருவடிகள் போற்றி !
பெயர் : அப்பூதியடிகள் நாயனார்
பூசை நாள் :தை சதயம்
அவதாரத் தலம் :திங்களூர்
முக்தித் தலம் :திங்களூர்
சோழமண்டலத்திலே, திங்களுரிலே பிராமணகுலத்திலே, பாவங்கள் என்று சொல்லப்பட்டவைகள் எல்லாவற்றையும் நீக்கினவரும், புண்ணியங்களென்று சொல்லப்படவைகள்
எல்லாவற்றையும் தாங்கினவரும், சிவபத்தி அடியார்களில் சிறந்தவருமாகிய அப்பூதியடிகணாயனார் என்பவர் ஒருவர் இருந்தார்.
அவர் சிவானுபூதிமானாகிய திருநாவுக்கரசுநாயனாருடைய மகிமையைக் கேள்வியுற்று, அவர்மேலே மிக அன்பு கூர்ந்து, தம்முடைய வீட்டினுள்ள அளவைகள் தராசுகள் பிள்ளைகள் பசுக்கள் எருமைகள் முதலிய எல்லாவற்றிற்கும் இந்நாயனாருடைய பெயரையே சொல்லிவருவார்.
இன்னும் அவர் மேலாசையினாலே, திருமடங்கள் தண்ணீர்ப்பந்தர்கள் குளங்கள் திருநந்தனவனங்கள் முதலியனவற்றை அந்நாயனார் பெயரினாற் செய்து கொண்டிருந்தார்.
இருக்குநாளிலே, அத்திருநாவுக்கரசு நாயனார் திருப்பழனமென்னும் ஸ்தலத்தை வணங்கிக்கொண்டு பிறதலங்களையும் வணங்கும்பொருட்டு, அந்தத் திங்களுருக்குச் சமீபமாகிய வழியிலே செல்லும்பொழுது, ஒரு தண்ணீர்ப்பந்தரை அடைந்து, திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயர் எங்கும் எழுதப் பட்டிருத்தலைக் கண்டு, அங்கு நின்றவர்கள் சிலரை நோக்கி, "இந்தத் தண்ணீர்ப்பந்தரை இப்பெயரிட்டுச் செய்தவர்யாவர்" என்று வினாவினார்.
அவர்கள் "இப்பந்தரைமாத்திரமன்று, இவ்விடத்தெங்கும் உள்ள அறச்சாலைகள், குளங்கள், திருநந்தனவனங்கள் எல்லாவற்றையும் அப்பூதியடிகணாயனார் என்பவர் இத்திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயரலேயே செய்தனர்" என்றார்கள்.
அதைத் திருநாவுக்கரசு நாயனார் கேட்டு, "இங்ஙனஞ் செய்தற்குக் காரணம் யாதோ" என்று நினைந்து, அவர்களை நோக்கி, "அவர் எவ்விடத்தில், இருக்கின்றவர்" என்று வினாவ; "அவர் இவ்வூரவரே இப்பொழுதுதான் வீட்டுக்குப்போகின்றார், அவ்வீடும் தூரமன்று சமீபமே" என்றார்கள்.
உடனே திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகணாயனாருடைய வீட்டுத்தலைக்கடைவாயிலிற் செல்ல, உள்ளிருந்த அப்பூதிநாயனார் சிவனடியார் ஒருவர் வாயிலில் வந்து நிற்கின்றார் என்று கேள்வியுற்று விரைந்து சென்று, அவருடைய திருவடிகளிலே நமஸ்கரிக்க; அவரும் வணங்கினார்.
அப்பூதிநாயனார் "சுவாமீ! தேவரீர் இவ்விடத்திற்கு எதுபற்றி எழுந்தருளினீர்" என்று வினாவினார்.
திருநாவுக்கரசு நாயனார் 'நாம் திருப்பழனத்தை வணங்கிக்கொண்டு வரும்பொழுது, வழியிலே நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரைக் கண்டும் அப்படியே நீர் செய்திருக்கின்ற பிறதருமங்களைக்கேட்டும்' உம்மைக் காண விரும்பி, இங்கே வந்தோம்" என்று சொல்லி, பின்பு, "சிவனடியார்கள் பொருட்டு நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரிலே உம்முடைய பெயரை எழுதாது வேறொருபெயரை எழுதியதற்குக் காரணம் யாது" என்று வினாவினார்.
அப்பூதிநாயனார் "நீர் நல்லவார்த்தை அருளிச்செய்திலீர், பாதகர்களாகிய சமணர்களோடு கூடிப் பல்லவராஜன் செய்த விக்கினங்களைச் சிவபத்தி வலிமையினாலே ஜயித்த பெருந்தொண்டரது திருப்பெயரோ வேறொருபெயர்" என்று கோபித்து, பின்னும், பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்தலாலே இம்மையினும் பிழைக்கலாம் என்பதை என்போலும் அறிவிலிகளும் தெளியும் பொருட்டு அருள்புரிந்த திருநாவுக்கரசுநாயனாருடைய திருப்பெயரை நான் எழுத, நீர் இந்தக் கொடுஞ்சொல்லை நான் கேட்கும்படி சொன்னீர். கற்றோணியைக்கொண்டு கடல்கடந்த அந்த நாயனாருடைய மகிமையை இவ்வுலகத்திலே அறியாதார் யாருளர்! நீர் சிவவேடத்தோடு நின்று இவ்வார்த்தை பேசினீர். நீர் எங்கே இருக்கிறவர்? சொல்லும்" என்றார்.
திருநாவுக்கரசுநாயனார் அவ்வப்பூதியடிகளுடைய அன்பை அறிந்து, "ஆருகதசமயப் படுகுழியினின்றும் ஏறும் பொருட்டுப் பரமசிவன் சூலைநோயை வருவித்து ஆட்கொள்ளப்பெற்ற உணர்வில்லாத சிறுமையேன் யான்" என்று அருளிச்செய்தார்.
உடனே அப்பூதிநாயனார், இரண்டு கைகளும் சிரசின்மேலே குவிய, கண்ணீர் சொரிய, உரை தடுமாற, உரோமஞ்சிலிர்ப்ப, பூமியிலே விழுந்து திருநாவுக்கரசுநாயனாருடைய ஸ்ரீபாதாரவிந்தங்களைப் பூண்டார்.
திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகளை எதிர்வணங்கி எடுத்தருள, அப்பூதியடிகள் மிகக் களிப்படைந்து கூத்தாடினார்; பாடினார்; சந்தோஷமேலீட்டினால் செய்வது இன்னது என்று அறியாமல், வீட்டினுள்ளே சென்று, மனைவியாருக்கும் பிள்ளைகளுக்கும், பிறசுற்றத்தார்களுக்கும் திருநாவுக்கரசுநாயனார் எழுந்தருளிவந்த சந்தோஷ சமாசாரத்தைச் சொல்லி, அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, நாயனாரை வணங்கும்படி செய்தார்.அவரை உள்ளே எழுந்தருளுவித்து, பாதப்பிரக்ஷாளனஞ் செய்தார்.
அங்ஙனம் செய்த தீர்த்தத்தை அவர்களெல்லாரும் தங்கண்மேலே தெளித்து, உள்ளும் பூரித்தார்கள். நாயனாரை ஆசனத்தில் இருத்தி, விதிப்படி அருச்சனை செய்து, "சுவாமீ, தேவரீர் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்திக்க; அவரும் அதற்கு உடன்பட்டருளினார்.
அப்பூதிநாயனார் திருவமுது சமைப்பித்து, தங்கள் புத்திரராகிய மூத்ததிருநாவுக்கரசை வாழைக் குருத்து அரிந்துகொண்டு வரும்பொருட்டு அனுப்ப; அவர் விரைந்து தோட்டத்திற்சென்று, வாழைக் குருத்து அரியும்பொழுது, ஒரு பாம்பு அவருடைய கையிலே தீண்டி, அதனைச் சுற்றிக்கொண்டது.
அவர் அதை உதறிவீழ்ந்து, பதைப்புடனே அது பற்றிய வேகத்தினாலே வீழுமுன் கொய்த குருத்தை வேகத்தோடு கொண்டோடி வந்து, விஷம் முறையே ஏறித்தலைக்கொண்ட ஏழாம்வேகத்தினாலே பல்லுங் கண்ணும் சரீரமும் கருகித் தீய்ந்து உரை குழறி மயங்கி, குருத்தைத் தாயார்கையில் நீட்டி, கீழே விழுந்து இறந்தார்.
அதுகண்டு, தந்தையாரும் தாயாரும் "ஐயோ! இது தெரிந்தால் இனி நாயனார் திருவமுது செய்யாரே" என்று துக்கித்து, சவத்தை வீட்டுப் புறத்து முற்றத்தின் ஓர்பக்கத்திலே பாயினால் மறைத்து வைத்துவிட்டுனர்
அப்பமூர்த்தியிடத்திற்சென்று "சுவாமி, எழுந்து வந்து திருவமுது செய்தருளவேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள் அப்பமூர்த்தி எழுந்து கைகால் சுத்தி செய்துகொண்டு, வேறோராசனத்தில் இருந்து, விபூதி தரித்து, அப்பூதிநாயனாருக்கும் அவர் மனைவியாருக்கும் விபூதி கொடுத்து; புதல்வர்களுக்கும் கொடுக்கும்போது, அப்பூதிநாயனாரை நோக்கி "நாம் இவர்களுக்கு முன்னே விபூதி சாத்தும்படி உம்முடைய சேட்டபுத்திரரை வருவியும்" என்றார்.
அப்பூதிநாயனார் "இப்போது அவன் இங்கே உதவான்" என்றார். அப்பமூர்த்தி அதைக் கேட்டவுடனே சிவபிரானுடைய திருவருளினாலே தம்முடைய திருவுள்ளத்திலே ஒரு தடுமாற்றத் தோன்ற, அப்பூதிநாயனாரை நோக்கி, "அவன் என்செய்தான்? உண்மை சொல்லும்" என்றார்.
அப்பூதிநாயனார் அஞ்சி நடுங்குற்று, வணங்கி நின்று, நிகழ்ந்த சமாசாரத்தை விண்ணப்பஞ்செய்தார். அப்பமூர்த்தி அதைக்கேட்டு, "நீர் செய்தது நன்றாயிருக்கின்றது; இப்படி வேறியார் செய்தார்" என்று சொல்லிக்கொண்டு எழுந்து, சிவாலயத்துக்குமுன் சென்று சவத்தை அங்கே கொணர்வித்து, விஷத்தை நீக்கியருளும் பொருட்டுப் பரமசிவன்மேலே திருப்பதிகம்பாடினார்.
உடனே அப்புத்திரர் உயிர்பெற்று எழுந்து; அப்பமூர்த்தியுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரிக்க; அப்பமூர்த்தி விபூதி கொடுத்தருளினார். அப்பூதிநாயனாரும் மனைவியாரும் தங்கள் புத்திரா பிழைத்தமையைக் கண்டும் அதைக்குறித்துச் சந்தோஷியாமல், நாயனார் திருவமுதுசெய்யாதிருந்தமையைக் குறித்துச் சிந்தை நொந்தார்கள்.
அப்பமூர்த்தி அதனை அறிந்து, அவர்களோடும் வீட்டிற்சென்று, அப்பூதி நாயனாரோடும் அவர் புத்திரர்களோடும் ஒருங்கிருந்து திருவமுது செய்தருளினார். அப்படியே சிலநாள் அங்கிருந்து, பின் திருப்பழனத்திற்குப் போயினார்.
அப்பூதியடிகள் சைவசமயாசாரியராகிய திருநாவுக்கரச நாயனாருடைய திருவடிகளைத் துதித்தலே தமக்குப் பெருஞ் செல்வமெனக்கொண்டு வாழ்ந்திருந்து, சிலகாலஞ் சென்றபின் பரமசிவனுடைய திருவடிகளை அடைந்தார். 63 நாயன்மார்களில் ஒருவராக ஈசன் அருளினார்.
திருச்சிற்றம்பலம் ! ஓம் அப்பூதியடிகள் நாயனார் திருவடிகள் போற்றி !
ஞான பண்டிதன் தலைமை தாங்கும் இந்த முருக யுகம் விரைவில் அமைய நாம் அனைவரும் தினமும் ஜோதி ஏற்றி முருகப்பெருமானையும் சித்தர்களையும் பூஜித்து
1.ஓம் சரவண ஜோதியே நமோ நம
2.ஓம் அகத்தீசாய நம ,
3.ஓம் நந்தீசாய நம
4.ஓம் திருமூல தேவாய நம
5 ஓம் கருவூர் தேவாய நம
6.ஓம் இராமலிங்க தேவாய நம .
7.ஓம் ஆறுமுக அரங்க மகா தேசிகாய நம
என்று தினமும் காலை மாலை வணங்கி நாமஜெபம் செய்து
" முருகா முருகா வருக வருக !
கலியுக மாற்றம் தருக தருக !"
என்று வேண்டுகோள் வைத்து , உள்ளம் உருகி, மனம் கசிந்து உண்மை அன்பால் முருகப்பெருமானையும் அவர்தம் வழியில் வந்த நவ கோடி சித்தர்களையும் பூஜித்து ,உலகில் நடக்கும் கொடுமைகளில் இருந்து இந்த உலகை காக்க நீரே விரைந்து வந்து ஆட்சி செய்ய வேண்டும் ,
முருகா ,எங்களது தாயே ,எங்களது தந்தையே , தாயினும் இனிய தயவுடைய தெய்வமே , தயாபரனே , தேவாதிதேவா ,கருணைக்கடலே எண்ணிலா கோடி ஞானிகளை உருவாக்கிய ஞான பண்டிதனே ! தாங்கள் மாவேகமாக விரைந்து வந்து எங்களுக்கு நல்லாட்சி தந்திடல் வேண்டும் என்று மனதார உள்ளன்போடு பூஜித்து மாதம் இருவருக்காவது அன்னதானம் செய்தும் எல்லா உயிரிடத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்பதை உணர்ந்து எல்லா உயிர்களையும் தம் உயிராக கருதி புலால் உணவை மறுத்தும் இந்த உலக நன்மைக்காக நாம் ஒரு விரதமாக இதை உறுதியாக கடைபிடித்தால் மிக மிக விரைவில் முருக யுகம் - ஞானசித்தர் யுகம் அமையும் என்பது உறுதி
சித்தர்கள் ஓலைச்சுவடி உபதேசம் :
பல ஜென்மங்களாக ஞானிகளுக்கு தொண்டு செய்தும் தவம் செய்தும் வந்த நம் குருநாதர் ஆறுமுக அரங்கர் இந்த ஜென்மத்தில் வள்ளலாரின் வழித்தோன்றலாக எல்லா ஞானிகளும் ஓருருவாக கலியுகத்தில் நம்மை காக்க வந்த முருக அவதாரமாக அவதரித்துள்ளார்கள்.
முருகப்பெருமான் கட்டளைப்படியே துறையூரில் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்காரக்குடிலை நிறுவி தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு (சுமார் 7000 அன்பர்களுக்கு)அன்னதானம் செய்தும் தினமும் வள்ளலார் வகுத்த அருட்ஜோதி தரிசனம் ,சித்தர்கள் வழிபாடு , ஞான நூல்களின் பாராயணம் என உண்மை ஆன்மீகமான சன்மார்க்க சித்தர் பூஜைதனை தொடர்ந்து சுமார் 50 வருடங்களாக செய்து வருகிறார்கள்.
அதன் பயனாக ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கரின் தொண்டர்கள்
இன்று தமிழ்நாட்டில் பல இடங்களில் சுமார் 30000 நபர்களுக்கு முருகப்பெருமானின் மூலிகை அருட்கஞ்சி தானமும் அன்னதானமும் கோவில்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் அனாதை அசிரமங்களிலும் முதியோர் இல்லங்களிலும் மக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையம் மற்றும் காய்கறி மார்க்கெட் சந்தை பகுதிகளிலும் அன்னதானம் செய்கிறார்கள்
தமிழ்நாடு மட்டுமல்லாமல் இலங்கை,மலேஷியா ,சிங்கப்பூர் ,ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள அன்பர்கள் ஆறுமுக அரங்கரின் கொள்கையான சித்தர் பூஜை மற்றும் அன்னதானத்தினை கடைப்பிடித்தும் பரப்பியும் வருகிறார்கள் .
எனவேதான் ஆறுமுக அரங்கர் தலைமை தாங்கும் துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்காரக்குடிலை ஏழாம்படைவீடாக முருகப்பெருமானும் நவகோடி சித்தர்களும் தம் அருட்சுவடி வாயிலாக அறிவித்து மக்கள் உண்மை ஆன்மீகத்தை பின்பற்றி உயர் ஞான வாழ்வான மரணமில்லா பெருவாழ்வை அடைய உபதேசிக்கிறார்கள்.
ஞானிகள் ஆசி பெற்று அனைவரும் நலமும் வளமும் பெற துறையூர் ஓங்காரக்குடிலுக்கு வாருங்கள் என்று திருவடி பணிந்து அன்புடன் அழைக்கிறோம் . .ஒருமுறையாவது வாருங்கள் சித்தர்களும் முருகப்பெருமானும் அருளாட்சி புரியும் உண்மை உணர்வீர்கள்